உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காரங்காட்டில் படகு சவாரி நிறுத்தம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

காரங்காட்டில் படகு சவாரி நிறுத்தம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

தொண்டி: புயல் எச்சரிக்கையால் தொண்டி அருகே காரங்காட்டில் படகு சவாரி நிறுத்தப்பட்டதோடு மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.சுற்றுலாப் பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையால் நேற்று முதல் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மீன்வளத்துறை அலுவலர்கள் கூறியதாவது:சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி கடற்பகுதியில் குறிப்பாக பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் நேற்று முதல் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மறு அறிவிப்பு வரை கடலுக்கு செல்ல வேண்டாம். கடலுக்கு சென்ற படகுகள் உடனடியாக கரை திரும்ப வேண்டும். படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும். காரங்காட்டில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி