மேலும் செய்திகள்
அதிவேக படகுகளில் பயணிகள் உற்சாகம்
15-Aug-2025
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில்வே துாக்கு பாலம் திறக்கப்படாததால் ஆபத்தை உணராமல் தனுஷ்கோடி மணல் தீடையை ஆழ்கடல் விசைப்படகுகள் கடந்து செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. பாம்பனில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலத்தை திறந்து முடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆக., 12ல் துாக்கு பாலத்தை திறந்த போது பழுது ஏற்பட்டு 6 மணி நேரத்திற்கு பின் சரி செய்தனர். இதனால் துாக்கு பால மென்பொருள் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய ஆக., இறுதி வரை துாக்கு பாலம் திறக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. துாக்கு பாலத்தை கடந்து செல்ல முடியாமல் ஆழ்கடல் படகுகள் பாம்பன் கடலில் காத்திருந்து திரும்பிச் சென்றன. இந்நிலையில் நாகையில் இருந்து கன்னியாகுமரி செல்ல 14 ஆழ்கடல் விசைப்படகுகள் ஆபத்தை உணராமல் இரு நாட்களாக தனுஷ்கோடி மணல் தீடையை கடந்து சென்றன. ரூ. பல கோடி மதிப்புள்ள இப்படகுகள் மணல் தீடையில் சிக்கினால் சேதமடையும். விபத்து அபாயமும் உள்ளது. எனவே பாம்பன் துாக்கு பாலத்தில் நிலவும் பழுதை நீக்கி விரைந்து திறக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15-Aug-2025