வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்பிடியே சீன ஃபோன்களையும் தூக்கி எறிங்க. எவனைப் பாத்தாலும் கையில், ரெட்மி, ஆப்போன்னு அலையறானுங்க. அந்த ஃபோன்கள் தான் நல்லா உழைக்குது. லாவா தண்டம்.
ராமநாதபுரம்:சீன இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை ராமேஸ்வரம் துறைமுகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.ராமேஸ்வரம், தங்கச்சி மடம் பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்க தலைவர் சேசுராஜா, செயலாளர் எமரிட், பொருளாளர் சகாயம் தலைமையிலான குழுவினர் ராமநாதபுரத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் புகார் மனு அளித்தனர்.மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் துறைமுகத்தில் பாரம்பரியமாக பல ஆண்டுகளாக அரசு அனுமதி பெற்றும், அரசு விதிமுறைகளுக்குஉட்பட்டும் 450க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் 193 எச்.பி., குறைந்த குதிரைத்திறனும், 150 விசைப்படகுகளில் 100 எச்.பி., குதிரைத்திறனும் கொண்ட உள்நாட்டு இன்ஜின்களை பயன்படுத்தி 600க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகளையும், மீனவர்களையும் இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. படகுகளை பறிமுதல் செய்கிறது. இலங்கை நீதிமன்றம் மீனவர்களுக்கு கூடுதல் சிறை தண்டனையும், அதிக அபராதத் தொகையும் விதிப்பதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுகிறது.இந்நிலையில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நான்கு விசைப்படகுகளில் மட்டும் அதிக குதிரைத்திறன் கொண்ட சீன இன்ஜின் பொருத்தியுள்ளனர். இதனால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் மற்றும் பிரச்னை ஏற்படுகிறது.சீன இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை துறைமுகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். பிரச்னையின்றி மீன்பிடி தொழில் செய்வதற்கு வழிவகைகளை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
அப்பிடியே சீன ஃபோன்களையும் தூக்கி எறிங்க. எவனைப் பாத்தாலும் கையில், ரெட்மி, ஆப்போன்னு அலையறானுங்க. அந்த ஃபோன்கள் தான் நல்லா உழைக்குது. லாவா தண்டம்.