நுால் வெளியீட்டு விழா
கடலாடி: கடலாடியில் ஆப்பனுார் கவிஞர் ராஜ்குமார் எழுதிய மண்ணறம் என்னும் நுால் வெளியீட்டு விழா நடந்தது. மன்னர் நாகேந்திர சேதுபதி தலைமை வகித்தார். ஓய்வு ஆசிரியர் நவநீதகிருஷ்ணன், ஓய்வு துணை கலெக்டர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முனியசாமி சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் அருணாச்சலம் நுாலை வெளியிட ஆர்.டி.ஐ.ஆர்வலர் ஜாகிர் உசேன் பெற்றுக் கொண்டார். உலக கலாச்சார துாதர் ஜோதிமலர், கவிஞர்கள், நாடக கலைஞர்கள் பங்கேற்றனர்.