உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்கள் புத்தக வாசிப்பு திறன் மேம்பாடு முகாம்

மாணவர்கள் புத்தக வாசிப்பு திறன் மேம்பாடு முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பு இயக்கம் முகாம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை வகித்தார். முகாமில் மாணவர்கள் செய்தித்தாள் படித்து காண்பித்தும், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியரும் உரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிப். 2 முதல் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் பங்கேற்க வலியுறுத்தினர்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர், கலை இலக்கிய ஆர்வலர் சங்க செயலாளர் வான்தமிழ் இளம்பரிதி , ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர்கள் டேவிட், ராமர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை