உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காலை உணவு திட்டம் ஆய்வு

காலை உணவு திட்டம் ஆய்வு

திருவாடானை: காலை உணவு திட்டத்தில் உணவு சாப்பிடும் மாணவர்களின் வருகை மற்றும் சுவையான உணவு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொண்டியில் அரசு தொடக்கப்பள்ளி (கிழக்கு), வில்கம், முனைவரா ஆகிய பள்ளிகளில் திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜி, காலை உணவு திட்டம் செயல்பாட்டை ஆய்வு செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது: அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு செய்யபட்டது. இதில் காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை மற்றும் கற்றலில் ஈடுபாடு அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு சுவையான உணவு வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து உணவை கவனமுடனும், தரமாகவும் தயாரிக்கும் படி சமையலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி