உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுவர் இடிந்து கொத்தனார் பலி

சுவர் இடிந்து கொத்தனார் பலி

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் வீடு கட்டும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் கொத்தனார் தினேஷ்குமார் உயிரிழந்தார்.முதுகுளத்துார் அலியார் தெருவில் பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டும் பணி நடக்கிறது. இங்கு உலகத்தேவன்பட்டியை சேர்ந்த கொத்தனார் தினேஷ்குமார் 29, குழி தோண்டிய போது அருகில் இருந்த சுவர் இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த தினேஷ்குமாரை முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தினேஷ்குமார் இறந்துவிட்டதாகக் கூறினர். முதுகுளத்துார் எஸ்.ஐ.,சக்திவேல் விசாரிக்கிறார். தினேஷ்குமாருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு வயது குழந்தை உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ