உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

பெருநாழி: பெருநாழி அருகே வேலாங்குளம் கிராமத்தில் வைகாசி பொங்கல் உற்ஸவ விழாவையொட்டி நடந்த வடமாடு மஞ்சு விரட்டு போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்தன.இங்கு பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. விழாவில் பால்குடம் ஊர்வலம் நடந்தது. வேலாங்குளத்தில் உள்ள அரியநாச்சி அம்மன், சக்தி விநாயகர், முருகன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக தீபாராதனைகள் நடந்தது.கோயில் முன்புறமுள்ள திடலில் கயிற்றின் ஒரு முனையில் தரையில் ஊன்றப்பட்டும் மறுமுனை காளையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்தது. 12 வீரர்கள் ஆர்வமுடன் ஒவ்வொரு காளையாக அடக்கினர். 15 நிமிடத்தில் அடக்க முடியாத காளைகளுக்கு பரிசுகளும், அடக்கிய வீரர்களுக்கு பரிசு பொருள்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை