உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நம்புதாளை கண்மாயில் தீயில் எரிந்த மரங்கள்

நம்புதாளை கண்மாயில் தீயில் எரிந்த மரங்கள்

தொண்டி: தொண்டி அருகே நம்புதாளை கண்மாய்க்குள் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. கண்மாயில் நீர் இல்லாததால் வண்டல் மண் எடுக்கும் பணி நடக்கிறது. கண்மாய்க்குள் இருந்த சீமைக்கருவேல மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் ஏராளமான மரங்கள் எரிந்தன.அப்பகுதி மக்கள் கூறுகையில், மரங்கள் எரிந்த போது புகை மூட்டமாக இருந்தது. யாரும் அருகில் செல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் தீ அணைந்தது. இதில் ஏராளமான மரங்கள் எரிந்தன. மரத்திற்கு தீ வைத்தவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை