உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருநாழி பஸ் ஸ்டாண்டிற்குள் வராத பஸ்: பயணிகள் பாதிப்பு ராமநாதபுரத்தில் இருந்து செல்கிறது

பெருநாழி பஸ் ஸ்டாண்டிற்குள் வராத பஸ்: பயணிகள் பாதிப்பு ராமநாதபுரத்தில் இருந்து செல்கிறது

பெருநாழி: ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி வழியாக நாகலாபுரம், புதுார் செல்லும் புதிய பஸ் பெருநாழி பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் செல்வதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி வழியாக நாகலாபுரம், புதுாருக்கு புதிய பஸ் சில மாதங்களுக்கு முன்பு துவக்கி வைக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி வழியாக பெருநாழி பஸ் ஸ்டாண்ட் வராமல் நேதாஜி பஜார் விலக்கு சாலை வழியாக துாத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் புதுார் செல்கிறது.இதனால் பஸ் எந்த நேரத்தில் வந்து செல்கிறது என்பதை பயணிகளால் அறிய முடியாமலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெருநாழியில் உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்லும் நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து வரக்கூடிய இந்த அரசு பஸ், பஸ்ஸ்டாண்டிற்குள் வராத நிலை உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.எனவே போக்குவரத்து அதிகாரிகள் ராமநாதபுரம் செல்லும் புதிய பஸ் பெருநாழி பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை