உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பயணியர் நிழற்குடையில் பஸ் கால அட்டவணை

பயணியர் நிழற்குடையில் பஸ் கால அட்டவணை

கமுதி : முதுகுளத்துார் கமுதி ரோடு புல்வாய்க்குளம் விலக்கு ரோட்டில் உள்ள பயணியர் நிழற்குடையில் மாணவர் நல மன்றம் சார்பில் நின்று செல்லும் அரசு, தனியார் பஸ் நேரம் கால அட்டவணை வைத்து பல்வேறு கிராமங்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுகின்றனர். கமுதி அருகே புல்வாய்க்குளத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முதுகுளத்துார் கமுதி ரோடு புல்வாய்க்குளம் விலக்கு ரோட்டில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ளது. கிராமத்திற்கு அடிக்கடி பஸ் வசதி இல்லாததால் விலக்கு ரோட்டில் காத்திருந்து முதுகுளத்துார், ராமநாதபுரம், பரமக்குடி செல்வதற்காகவும் அருப்புக்கோட்டை கமுதி விருதுநகர் செல்வதற்காகவும் மக்கள், மாணவர்கள் செல்கின்றனர். நீண்ட நேரம் காத்திருப்பதால் புல்வாய்க்குளத்தில் உள்ள மாணவர் நல மன்றம் சார்பில் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் புல்வாய்க்குளம் விலக்கு ரோட்டில் உள்ள பயணியர் நிழற்குடையில் இங்கு நின்று செல்லும் அரசு, தனியார் பஸ் கால அட்டவணை வைத்துள்ளனர். இதனால் வெளியூரில் இருந்து வந்து காத்திருக்கும் மக்கள் பயனடைகின்றனர். எனவே பல்வேறு கிராமங்களுக்கு முன்னுதாரணமாக புல்வாய்க்குளம் மாணவர் நல மன்றம் செயல்படுகிறது. இச்செயலை மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை