உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் மழை, வெள்ள சேத பாதிப்புக்கு அழைக்கவும்

பரமக்குடியில் மழை, வெள்ள சேத பாதிப்புக்கு அழைக்கவும்

பரமக்குடி : பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் மழை, வெள்ள சேத பாதிப்புக்கு 04564--224151 என்ற தொலைபேசியில் பொதுமக்கள் அழைக்கலாம் என சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் சுகாதாரம் மற்றும் வடிகால் பிரச்னைகளுக்கு தீர்வு காண முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி வருவாய் அலுவலர்கள் குழு உருவாக்கப்பட்டு குப்பை அகற்றுதல், கால்வாய் சுத்தம் செய்தல், கழிவுநீர் தேங்குவதை தடுக்கும் பணிகள் நடக்கிறது.தொடர்ந்து சுகாதாரம் மற்றும் வடிகால் பிரச்னை, மின் கம்பம் சேதம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி