மேலும் செய்திகள்
மார்க்சிஸ்ட் தாலுகா மாநாடு
14-Nov-2024
சிக்கல்: மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் மத்திய பா.ஜ.,வின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய பிரசார இயக்கம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் சிக்கல் மற்றும் ஏர்வாடியில் நடந்தது.கடலாடி கிழக்கு தாலுகா செயலாளர் அம்ஜத்கான் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவாஜி முன்னிலை வகித்தார். தாலுகா குழு உறுப்பினர்கள் பச்சமால், ராமசாமி, சுப்பிரமணியன், நம்புராஜன், ஜெயக்குமார், மாற்றுத்திறனாளிகள் சங்க தாலுகா செயலாளர் முகமது சுல்தான், முருகேசன், சிக்கல் நகர செயலாளர் சத்யராஜ், கிளை செயலாளர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
14-Nov-2024