உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஆசிரியை மீது தாக்குதல் 2 பெண்கள் மீது வழக்கு

 ஆசிரியை மீது தாக்குதல் 2 பெண்கள் மீது வழக்கு

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றுபவர் நேசசெல்வி 50. இங்கு சோலியக்குடியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி படிக்கிறார். இவர் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் ஆசிரியை கண்டித்தார். மாணவி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து நேற்று பள்ளிக்கு சென்ற மாணவியின் தாய் மாரிசெல்வம், மாமியார் பாகம்பிரியாள் ஆகியோர் வகுப்பறைக்குள் சென்று ஆசிரியை தலைமுடியை பிடித்து இழுத்து சுவற்றில் மோதி தாக்கினர். தொண்டி போலீசார் இருவர் மீதும் வழக்குபதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை