உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் நீர்

காவிரி குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் நீர்

திருவாடானை; திருவாடானை மணிமுத்தாறு வழியாக செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது.தொண்டிக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாய் இணைப்பு திருவாடானை வழியாக செல்கிறது. மதுரை- தொண்டி சாலையில் மங்களநாதன் குளம் அருகே மணிமுத்தாறு பாலத்தின் கீழ் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. அந்த நீர் ஆற்றில் பாய்வதால் யாருக்கும் பயன்படாத நிலையில் உள்ளது. வீணாகும் நீரால் தொண்டிக்கு முழுமையாக குடிநீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொண்டி மக்களுக்கு போதுமான நீர் கிடைக்காததால் தொண்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் குழாயை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை