மாரியூர் அருகே வீணாக வெளியேறும் காவிரி நீர்
சாயல்குடி : சாயல்குடி அருகே மாரியூர் ரோட்டோரத்தில் மூன்று நாட்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் குழாயில் தண்ணீர் பீறிட்டு வீணாகிறது.சாயல்குடி அருகே ஒப்பிலானில் இருந்து மாரியூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள சிறிய வால்வு தொட்டியில் குழாயில் இருந்து பீறிட்டு வரும் தண்ணீர் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடிக்கிறது. இதனால் குடிநீர் அதிகளவு வீணாகிறது.சுற்றுவட்டார கிராமங்களுக்கு குறைந்த அளவில் தண்ணீர் சப்ளை செய்து வரும் நிலையில் இது போன்ற வீணடிப்பால் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் குடிநீர் வீணாவதை தடுக்க குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.