உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காத்தாகுளத்தில் சிசிடிவி அமைப்பு

காத்தாகுளத்தில் சிசிடிவி அமைப்பு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காத்தாகுளத்தில கிராம மக்களின் சொந்த முயற்சியில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 'சிசிடிவி' கேமரா அமைக்கப்பட்டது.முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காகவும், போலீசுக்கு உதவியாகவும் கிராமத்தின் சார்பில் 'சிசிடிவி' கேமரா அமைக்கப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து கிராமம் முழுவதும் கண்காணிப்பதற்காக 5 'சிசிடிவி' கேமரா அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா, கண்காணிப்பு அறையை முதுகுளத்தூர் டி.எஸ்.பி., சண்முகம் திறந்து வைத்தார். உடன் எஸ்.ஐ., சுரேஷ்குமார், கிராமதலைவர் சேதுமாணிக்கம் மற்றும் சேதுராமன், இளங்கோ உட்பட கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை