உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி அருகே மூவரசர் சர்ச் விழாவில் தேர் பவனி

பரமக்குடி அருகே மூவரசர் சர்ச் விழாவில் தேர் பவனி

பரமக்குடி: பரமக்குடி அருகே பி.முத்துச்செல்லாபுரம் கிராமத்தில் மூவரசர் சர்ச் தேர் பவனி விழா நடந்தது.குழந்தை இயேசு பிறந்ததும் அவரைக் காண மூன்று பேர் புறப்பட்டு சென்றனர். இந்த கஸ்பார், மல்கியூர், பல்த்தசார் ஆகியோரை போற்றும் வகையில் பி.முத்துச் செல்லாபுரத்தில் மூவரசர் சர்ச் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, புனித மூவரசர் திருக்காட்சி திருவிழா டிச.30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நவநாள் சிறப்பு திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் இரவு சிறப்பு திருப்பலி நிறைவடைந்து, மூவரசர்கள் அலங்கரித்த மின்தேரில் பவனி வந்தனர். நேற்று மாலை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. பாதிரியார்கள், பங்கு இறை மக்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ