உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சதுரங்கப் போட்டி பரிசளிப்பு விழா

சதுரங்கப் போட்டி பரிசளிப்பு விழா

ராமநாதபுரம் : பனைக்குளத்தில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா, சதுரங்கப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.பள்ளித் தலைமை யாசிரியர் முத்துமாரி தலைமை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட சதுரங்கக் கழகம் நடத்திய 24வது மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்ற 15 மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர் மணிகண்டன் ஆகியோருக்கு பனைக்குளம் லெஜன்ட் குரூப்ஸ் சார்பில் பாராட்டுச் சான்றிதழ், பதக்கம், பரிசுகள் வழங்கப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் சூசை மாணவர்களை பாராட்டினர். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஜாகிர்அலி, நத்தர்ஷா, மூத்த இடைநிலை ஆசிரியர் ஹாஜா மைதீன் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை