கிழக்கு கடற்கரை சாலையோரம் கோழி கழிவுகளால் ஆபத்து
திருப்புல்லாணி: - திருப்புல்லாணி முதல் கீழக்கரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் கோழி கழிவுகளை மூடையாக கட்டி போட்டு செல்கின்றனர்.இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: சாலையோரங்களில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளை சாப்பிடுவதற்காக நாய் மற்றும் கழுகுகள் வருகின்றன. கழுகு தனது குஞ்சுகளுக்கு அவற்றை இரையாக கொடுக்கும் போது நோய்பட்டு பெரும்பாலான குஞ்சுகள் இறந்து விடுகின்றன.கழுகுகளின் இனப்பெருக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஊராட்சி நிர்வாகம் சாலையோரங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.