உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் முதல்வர் வருகை ரத்து: நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

ராமநாதபுரம் முதல்வர் வருகை ரத்து: நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

ராமநாதபுரம்:கரூர் தமிழக வெற்றிக்கழக பிரசார நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் காரணமாக முதல்வர் ஸ்டாலின் இன்றும், நாளையும் (செப்.,29,30) ராமநாதபுரத்தில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. ராமநாதபுரத்தில் இன்று (செப்.,29) மாலை 6:00 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் ரோடு ேஷா, நாளை (செப்., 30) காலையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் கரூரில் 40 பேர் பலியானதையடுத்து முதல்வர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதையடுத்து ராமநாதபுரத்தில் முதல்வர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகள் அக்.,3, 4ல் நடக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை