உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் தெப்பக்குளத்தில் குழந்தை பலி

கோயில் தெப்பக்குளத்தில் குழந்தை பலி

திருவாடானை:திருவெற்றியூர் கோயில் தெப்பகுளத்தில் விழுந்து இரண்டு வயது குழந்தை பலியானது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் முதல் நாள் இரவு தங்கியிருந்து மறு நாள் காலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள்.மதுரை மாவட்டம் மேலுார் தாலுகா கொட்டகுடியை சேர்ந்த தம்பதி பாலமுருகன் - ஜெயலட்சுமி. பாலமுருகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு பாலதர்ஷினி என்ற 2 வயது பெண் குழந்தையும், நான்கு வயது மகனும் உள்ளனர்.தாய் தமிழ்செல்வியுடன் ஜெயலட்சுமி அவரது இரு குழந்தைகளும் நேற்று முன்தினம் திருவெற்றியூர் வந்தனர். தெப்பக்குளம் அருகே உள்ள மண்டபத்தில் தங்கியிருந்தனர்.இரவு 12:00 மணிக்கு குழந்தை பாலதர்ஷனி தெப்பக்குளத்திற்கு சென்று தவறி விழுந்து நீரில் மூழ்கினார். சிறிது நேரத்தில் குழந்தையை காணாது அனைவரும் தேடினர். அப்போது பாலதர்ஷனி உடல் நீரில் மிதந்தது. ஜெயலட்சுமி புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி