குழந்தை பலி
தேவிபட்டினம்: அழகன்குளம் தேவர் குடியிருப்பை சேர்ந்த கோபி மகன் சரவணன் 2. இவரது தந்தை சில மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் தாய் வள்ளி பராமரிப்பில் இருந்தார். இந்நிலையில், அழகன்குளம் ரேஷன் கடைக்கு பாட்டியுடன் நடந்து சென்ற போது சாமிதோப்பு பகுதியில் இருந்து பனைக்குளம் நோக்கி சென்ற டூவீலர் மோதி படுகாயம் அடைந்த சரவணன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று பலியானார். டூவீலரை ஓட்டிய காளிதாஸ் 38, மீது தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிந்தனர்.