உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் குழந்தைகள் மைய தரைத்தளம் சேதம்

பரமக்குடியில் குழந்தைகள் மைய தரைத்தளம் சேதம்

பரமக்குடி, : -பரமக்குடியில் குழந்தைகள் மையம் தரைத்தளம் சேதமடைந்துள்ளதால் குழந்தைகள் விழுந்து காயமடைகின்றனர்.பரமக்குடி அய்யாதுரை தெருவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் குழந்தைகள் மையம் செயல்படுகிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இந்த மையம் அருகில் நகராட்சி குப்பையை கொட்டுகின்றனர்.மழை பெய்தால் மையத்தை ஒட்டி ரோட்டில் தண்ணீர் தேங்குகிறது. முக்கியமாக குழந்தைகள் மையத்தின் உள்பகுதியில் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. இதனால் குழந்தைகள் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.எனவே குழந்தைகள் மையம், அதைச் சுற்றிலும் சுகாதாரம் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை