உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

திருவாடானை,: திருவாடானை, தொண்டி பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இயேசுவின் பிறப்பை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஸ்டார்களை தொங்கவிட்டனர். மாட்டு தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் சிலர் குடில்கள் அமைத்திருந்தனர்.ஓரியூர் புனித அருளானந்தர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சுகளிலும் சிறப்பு திருப்பலி நடந்தது. திருவாடானையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தெற்கு தெருவில் உள்ள ஒரு வீட்டு வாசலில் கிறிஸ்துமஸ் தாத்தா கேக் வெட்டுவது போல் கோலம் வரைந்திருந்தனர்.

ராமேஸ்வரம் -

ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் உள்ள சூசையப்பர் சர்ச், குழந்தை இயேசு சர்ச், சந்தியாகப்பர் சர்ச், மாதா சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்று அருளாசி பெற்றனர். தொடர்ந்து சர்ச் வளாகத்தில் இறைமக்கள் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்தும், பாட்டு பாடி உற்சாகமாக கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ