உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோ-ஆப் டெக்சில் தீபாவளிக்கு  ரூ.72 லட்சம் விற்பனை இலக்கு

கோ-ஆப் டெக்சில் தீபாவளிக்கு  ரூ.72 லட்சம் விற்பனை இலக்கு

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் தீபாவளி பண்டிகைக்கான 30 சதவீத தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்து கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மென் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்த ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. www.cooptex.gov.inஎன்ற இணையதளம் வழியாகவும் ஜவுளிகளை வாங்கலாம். நடப்பு ஆண்டில் ரூ.72 லட்சத்திற்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசுத் துறையினர், தனியார் நிறுவன பணியாளர்கள் வாங்க வேண்டும் என்றார்.மண்டல மேலாளர் (பொ) செந்திவேல், மேலாளர் பாண்டியம்மாள் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை