கூட்டுறவுப் பணியாளர் ஸ்டிரைக் உரம் வழங்கும் பணிகள் பாதிப்பு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துபணியாளர்கள் சங்கம் சார்பில் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் நடப்பதால் வேளாண் பணிகளுக்குரியஉரம் வழங்கும் பணிகள், ரேஷனில் பொருட்கள் வினியோகம்பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் 132 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்சங்கங்கள், அதன் கட்டுப்பாட்டில் 450 ரேஷன் கடைகள்செயல்படுகின்றன. இந்நிலையில் மாவட்டம் விட்டுமாவட்டத்திற்கு சென்று பணிபுரியும் பணியாளர்களைஅருகில் உள்ள கடைக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.அதன் பிறகு புதிதாக ரேஷன் விற்பனையாளர்களை நியமிக்கவேண்டும்.காலாவதியான பொருட்களை திரும்பஎடுத்துக்கொள்வதற்கு பதில் சம்பந்தப்பட்டவிற்பனையாளர்களை அதற்கான தொகையை திரும்ப செலுத்த கட்டாயப்படுத்துகின்றனர். இது பணியாளர் விரோத போக்கு.இவற்றை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட தொடக்ககூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில்அக்.21 முதல் தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் நடக்கிறது.மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், மாவட்டச் செயலாளர்குஞ்சரபாண்டியன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி,முன்னாள் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் கிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் பொற்செல்வன்போராட்டத்தை ஒருங்கிணைத்தனர்.போராட்டம்காரணமாக தீபாவளி பண்டிகை நேரத்தில் ரேஷனில்பொருட்கள் வாங்க முடியாமலும், பருவமழை காலத்தில் விவசாயிகள் உரம் பெற முடியாமலும் சிரமப்படுகின்றனர்.எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.