உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர்கள்  எல்லைக்குள் மீன்பிடித்து  பாதுகாப்புடன் சென்று வர வேண்டும் கலெக்டர் அறிவுரை

மீனவர்கள்  எல்லைக்குள் மீன்பிடித்து  பாதுகாப்புடன் சென்று வர வேண்டும் கலெக்டர் அறிவுரை

ராமநாதபுரம்: மீன்பிடி தடைக்காலம் நீங்கி மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் உரிய எல்லைக்குள் மட்டும் மீன்பிடித்து பாதுகாப்புடன் சென்று வர வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தியுள்ளார்.ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மீனவர் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர் மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். மீனவர் குடும்பங்களுக்கு போதிய குடிநீர் வழங்க வேண்டுதல், விடுபட்ட மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கடலில் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்ம் என மீனவர்கள், சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். கலெக்டர் பேசுகையில், கோரிக்கைகளுக்கு மீன்வளத்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீனவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ப தங்கச்சிமடம், குந்துகால் பகுதியில் ரூ.148 கோடியில் மீன் இறங்கு தளம் மற்றும் துாண்டில் வளைவு அமைக்கவும், பாம்பன் பகுதியில் ரூ.60 கோடியில் துாண்டில் வளைவு அமைக்கவும், ரோஜ்மா நகரில் ரூ.20 கோடியில் துாண்டில் வளைவு புதுப்பிக்க அரசாணை வரப்பெற்றுள்ளது. மீன்பிடி தடைக்காலம் நீங்கி மீன் பிடிக்க மீனவர்கள் செல்லும் மீனவர்கள் உரிய எல்லைக்குள் மட்டும் மீன்பிடித்து பாதுகாப்புடன் சென்று வர வேண்டும். மீன்களுக்கு உரிய விலை கிடைக்க மீன்வளத்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மீன்வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத், ராமேஸ்வரம் டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி, மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் சிவகுமார், தமிழ்மாறன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை