உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பசும்பொன்னில் கலெக்டர் ஆய்வு

பசும்பொன்னில் கலெக்டர் ஆய்வு

கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி, 63ம் ஆண்டு குருபூஜை விழா அக்.,28, 29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல்வர், பிற அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை செலுத்த உள்ளனர். இதையடுத்து பசும்பொன்னில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார். அப்போது தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்பு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுக்கான ரோடு வசதி, குடிநீர், கழிப்பறை வசதி, வாகனம் நிறுத்துமிடங்கள், மருத்துவ சேவை உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவணபெருமாள், தாசில்தார் ஸ்ரீராம், பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன், லெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை