உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரி பட்டமளிப்பு விழா

கல்லுாரி பட்டமளிப்பு விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். துணைத் தாளாளர் பார்த்தசாரதி, செயலாளர் சகுந்தலா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட காரைக்குடி அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் பேசியதாவது: 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்ற பாரதி யின் வரிகளுக்கேற்ப மாணவிகள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேற்றமடையவும், வெற்றிபெற வேண்டும். சமூக அறிவுடன் கூடிய தலைமைப் பண்பை பெற முயல வேண்டும். இளைஞர்கள் சமூக வலை தளப் பக்கங்களில் மூழ்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார். 201 மாணவர்கள் பட்டங்களைப் பெற்று உறுதி மொழி ஏற்றனர். இதில் 16 மாணவிகள் பல்கலை தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். வேலுமாணிக்கம் அறக்கட்டளை உறுப்பினர்கள் தேவகி மனோகரன், முத்துக்குமார், பத்மாவதி, முதல்வர் ரஜனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை