உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண்டல தடகள போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

மண்டல தடகள போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

ராமநாதபுரம்: திருச்செங்கோடு தனியார் கல்லுாரியில் அண்ணா பல்கலை மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற ராமநாதபுரம் செய்யது அம்மாள்பொறியியல் கல்லுாரி கட்டடவியல் துறை மாணவி மதுமிதா குண்டு எறிதலில் தங்கம், வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். இதையடுத்து மதுமிதா டிச.26 முதல் 30 வரை ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார். சாதனை புரிந்த மாணவியை கல்லுாரித் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, முதல்வர் பெரியசாமி, உடற்கல்வி ஆசிரியர் சத்தியேந்திரன், அனைத்துறை பேராசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ