உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாநில கலைத்திருவிழா போட்டி வென்ற மாணவருக்கு பாராட்டு

மாநில கலைத்திருவிழா போட்டி வென்ற மாணவருக்கு பாராட்டு

ராமநாதபுரம்: கோவையில் நடந்த மாநில அளவிலான கலைத்திருவிழாவில் களிமண் பொம்மை செய்யும் போட்டியில் வென்ற ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் தருண் பாராட்டு பெற்றார்.திருப்புல்லாணி வட்டம் ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 4ம் வகுப்பு மாணவர் தருண் 8. இவர் கோவையில் நடந்த மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்றார். இதில் அழகிய களிமண் பொம்மைகள் செய்து மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்.சாதித்த மாணவருக்கு மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கேடயம் வழங்கி பாராட்டினார். வட்டார கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா, திருப்புல்லாணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி, பள்ளி தலைமையாசிரியர் தங்கரெத்தின மலர், உதவி ஆசிரியர்கள் ஸ்ரீவித்யா, சிக்கந்தரமா ஷஹனாஸ், கார்த்திகா, தாட்சாயினி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை