ஓட்டு திருட்டை கண்டித்து காங்., கண்டன பொதுக்கூட்டம்
ராமநாதபுரம்,: அகில இந்திய மீனவர் காங்., சார்பில் ஓட்டு திருட்டிற்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனையில் நேற்று இரவு நடந்தது. முன்னாள் மத்திய நிதி யமைச்சர் சிதம்பரம், காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தனர். அகில இந்திய மீனவர் காங்., தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ முன்னிலை வகித்தார். ராமநாதபுரத்தில் நலிந்த காங்., குடும்பத் தினருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: ஓட்டுச்சாவடியில் நடக்கும் மோசடி தற்போது குறைந்துவிட்டது. தமி ழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., தலைமையில் இரு அணிகள் வலிமையாக உள்ளது. அக்கட்சிகளை சேர்ந்த பூத் முகவர்கள் 75 ஆயிரம் ஓட்டுச்சாவடியில் வலிமையாக இருப்ப தால் போலி வாக்காளர் நுழையமுடியாது. இதனால் பீகார் போன்று தமிழகத்தில் ஓட்டு திருட்டு நடக்காது என்றார். மீனவர் காங்., தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ பேசுகையில், இலங்கை அரசு 570 படகுகளுக்கு மேல் சிறைபிடித்து வைத்துள்ளது. இதுவரை ஒரு படகு கூட மீட்கப்படவில்லை. குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்தால் உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் விடு விக்கின்றனர் என்றார். திருவாடனை எம்.எல்.ஏ., கரு மாணிக்கம், மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர்கள் செல்லத்துரை அப்துல்லா, செந் தாமரை கண்ணன், தேவேந்திரன், ஜோதிபாலன், சரவண காந்தி, குமார், வேல்சாமி, மாவட்ட உள்ளாட்சி குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, நகர் தலைவர் கோபி, அகில இந்திய மீனவர் காங்., செய லாளர் ரவி, மதுரை மாவட்ட தலைவர் கார்த்தி கேயன், நகராட்சி கவுன்சிலர்கள் மணிகண்டன், ஜோதிமணி, முத்துராமலிங்கம், புஷ்பலதா, பாம்பன் நகர் தலைவர் அருண் ரிச்சர்ட், ராமேஸ்வரம் நகர் காங்., தலைவர் ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.