மேலும் செய்திகள்
மகளிர் ஸ்டேஷனில் காத்திருப்பு அறை இன்றி அவதி
05-Sep-2025
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டும் பணி நடக்கிறது. முதுகுளத்துார் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண்கள் ஏதேனும் புகார் அளிக்க வேண்டும் என்றால் பரமக்குடி, கமுதி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சென்று வரும் நிலை உள்ளது. இதனால் நாள் முழுவதும் வீணாகிறது. இதையடுத்து 2022ம் ஆண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி புதிதாக முதுகுளத்துார் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாளில் இருந்து முதுகுளத்துார் வழிவிடு முருகன் கோயில் பின்புறம் உள்ள வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக இதுவரை நிரந்தர கட்டடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். போதுமான இட வசதி இல்லாமல் மகளிர் போலீசார் சிரமப்படுகின்றனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக முதுகுளத்துார் டி.எஸ்.பி.,அலுவலகம் அருகே ரூ.1.28 கோடியில் புதிதாக மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டும் பணி துவங்கி மும்முரமாக நடக்கிறது.
05-Sep-2025