கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊதிய உயர்வு, பதிவாளர் சுற்றறிக்கையில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டுமை. காலி பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதன் அடுத்த கட்டமாக தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மாவட்டச் செயலாளர் குஞ்சர பாண்டியன் தலைமையில் போராட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் பாஸ்கரன், செயலாளர் கோபால், பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். உடன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கணினி ஆபரேட்டர்கள், நகை மதிப்பீட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வேலை நிறுத்த போராட்டத்தால் மக்கள் சிரமப்பட்டனர்.