மேலும் செய்திகள்
மாணவருக்கு பாராட்டு விழா
22-Sep-2024
ஆர்.எஸ்.மங்கலம்: சிலுகவயல் கிராமத்தில், ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்.மாவட்ட தொடர்பு அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். புல்லமடை ஊராட்சி தலைவர் கனிமொழி முகாமை துவங்கி வைத்தார். முகாமில் அப்பகுதியில் தெருக்கள், விளையாட்டு மைதானங்கள் அரசு அலுவலக கட்டட வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள்,ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
22-Sep-2024