உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாடகை கட்டடத்தில் இயங்கும் சுங்கத்துறை

வாடகை கட்டடத்தில் இயங்கும் சுங்கத்துறை

தொண்டி: தொண்டி கடற்கரை ஓரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு சுங்கத்துறை அலுவலகம் கட்டப்பட்டது. தொண்டியிலிருந்து இலங்கைக்கு தங்கம், கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் தங்கியிருந்து செயல்பட்டு வந்தனர். ஆரம்பத்தில் இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் பொது தொண்டி அருகே கடற்கரைக்குள் பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.அதன் பிறகு இதுவரை பெரிய அளவிலான எந்த கடத்தலையும் தடுக்கவில்லை. சுங்கத்துறைக்கு சொந்தமான கட்டடம் சேதமடைந்ததால் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக கடற்கரை அருகே உள்ள வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. அரசு நிதி வீணாவதால் புதிய கட்டடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை