| ADDED : ஜன 20, 2024 04:32 AM
பட்டணம்காத்தான்: ராமநாதபுரம் அருகே ராமேஸ்வரம் ரோட்டிலுள்ள டி-பிளாக் பஸ் ஸ்டாப் நிழற்குடையில் இருக்கைகள் சேதமடைந்துள்ளதால் கர்ப்பிணிகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் பஸ் ஸ்டாப்பில் இருந்து ராமநாதபுரம், ராமேஸ்வரம், சுற்றியுள்ள பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பயணிகள் பஸ்சில் செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருக்கும் வகையில் இருக்கைகள் வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை சரிவர பராமரிக்காமல் விட்டதால் சுற்றிலும் சுவரொட்டிகள் ஓட்டியுள்ளனர். தற்போது நாற்காலிகள் சேதமடைந்துள்ளதால் பஸ்சிற்காக காத்திருக்கும் கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.