மேலும் செய்திகள்
என்னுடன் பிறந்தது கூத்துக்கலை!
06-Jan-2025
பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் ஆடு வதைக்கூடம் செயல்படாத நிலையில் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.பரமக்குடி போர்டிங் ரோடு பகுதியில் நகராட்சி ஆடுவதைக்கூடம் உள்ளது. இங்கு முறையாக கால்நடை மருத்துவர் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு ஆட்டையும் பரிசோதித்து பின்னர் அதனை இறைச்சிக்காக வதை செய்ய வேண்டும். ஆனால் இந்த ஆடுவதைக்கூடம் கடந்த 5 ஆண்டுகளாகவே முற்றிலும் உடைந்து சேதமடைந்துள்ளது. இந்த கட்டடம் இதனால் ஒவ்வொரு நாளும் ஆட்டிறைச்சி விற்பனை செய்பவர்கள் தங்கள் கடைகளின் முன்பு அல்லது கடைகளின் உள்ளேயே வதைக்கின்றனர். நகரில் மாட்டிறைச்சி கடைகள் ஏராளமாக பெருகி உள்ளன. கழிவுநீர் வாய்க்காலிலும் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் தொற்று அபாயம் உண்டாகிறது. எனவே நகராட்சி ஆடுவதைக் கூடத்தை முறையாக சீரமைத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
06-Jan-2025