உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சங்கரபாண்டி ஊருணி ரோடு சேதம்: வாகனஓட்டிகள் அவதி

சங்கரபாண்டி ஊருணி ரோடு சேதம்: வாகனஓட்டிகள் அவதி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சிக்குட்பட்ட சங்கரபாண்டி ஊருணியிலிருந்து கமுதி இணைக்கும் ரோட்டில் மழைநீர் தேங்கியும் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் நடப்பதற்கே மக்கள் சிரமப்படுகின்றனர்.சங்கரபாண்டி - கமுதி ரோட்டில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக தார்ரோடு அமைக்கப்பட்டது.தொடர் பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக ரோடு சேதமடைந்துள்ளது. தற்போது பருவமழை காலம் என்பதால் ரோட்டில் மழைநீர் தேங்கி உள்ளது. நடப்பதற்கு லாயக்கற்ற ரோடாக மாறி உள்ளது. இதனால் வெளியே நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். தெருவில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி தாழ்வாக செல்வதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.ரோடு சேதம் காரணமாக டிராக்டர் வருவதில்லை. இதனால் தண்ணீருக்காக மக்கள் அலையும் அவலநிலை உள்ளது. எனவே ரோட்டை சீரமைக்கவும், தாழ்வாக செல்லும் மின்கம்பியை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை