உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதமடைந்த கடலாடி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம்

சேதமடைந்த கடலாடி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம்

கடலாடி: சேதமடைந்த கட்டடத்தில் கடலாடி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது.இங்கு 1962ல் கட்டப்பட்ட சிறிய கட்டடத்தில் வேளாண் துணை இயக்குனர், வேளாண் உதவி அலுவலர், தொழில்நுட்ப அலுவலர் உட்பட 6 பேர் பணி செய்கின்றனர். 60 ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நாள்தோறும் சேதமடைந்த அலுவலகத்திற்கு வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையால் சுவற்றில் நீர்க்கசிவு ஏற்பட்டு வளாகப் பகுதி முழுவதும் விரிசலுடன் சேதமடைந்துள்ளது. விவசாயிகள் கூறியதாவது:கடலாடி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் எவ்வித பராமரிப்பும் இன்றி அடிக்கடி சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுவதால் அச்சமடைந்துள்ளனர். இதற்கான இடம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.எனவே விரைவில் புதிய வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தரமான முறையில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை