சேதமடைந்துள்ள பயணியர் நிழற்குடை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பூங்குளத்தில் பயணியர் நிழற்குடை சேதமடைந்துள்ளது.முதுகுளத்துார் அருகே பூங்குளம் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. தற்போது வரை பராமரிப்பு பணி செய்யப்படாததால் நிழற்குடை ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மழை,வெயில் காலத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் மரத்தடியில் காத்திருந்து செல்கின்றனர். எனவே பயணியர் நிழற்குடையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.