உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடி, எமனேஸ்வரம் வைகை ஆறு தரைப்பாலத்தில் ஆபத்து; எப்பத்தான் சரி செய்வீர்களோ...

 பரமக்குடி, எமனேஸ்வரம் வைகை ஆறு தரைப்பாலத்தில் ஆபத்து; எப்பத்தான் சரி செய்வீர்களோ...

பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் வைகை ஆறு தரைப்பாலம் தடுப்பு கம்பிகள் இன்றி உடைந்து வரும் சூழலில் ஆபத்தான பயணம் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். பரமக்குடி நகராட்சி அந்தஸ்தை பெரும் நோக்கில் வைகை ஆற்றின் மறு கரையில் உள்ள எமனேஸ்வரம் சேர்க்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆற்று பாலம் மட்டுமே இருந்தது. எமனேஸ்வரம் பகுதிக்கு மழை வெள்ள காலங்களில் செல்ல 3 கி.மீ., வரை சுற்றி செல்லும் நிலை இருந்தது. பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெரு, எமனேஸ்வரம் நயினார்கோவில் ரோட்டை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து வந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக இரு புறங்களில் உள்ள சுவர்களும் இடிந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. பாலம் அமைக்கப்பட்ட நாள் தொடங்கி இன்று வரை இரண்டு ஓரங்களிலும் தடுப்பு கம்பிகள் கிடையாது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியதன் பேரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெயரளவில் கம்பிகள் அமைக்கப்பட்டு அனைத்தும் திருடப்பட்டு விட்டன. கடந்தாண்டு தரைப்பாலம் ரோடு மட்டுமே சீரமைக்கப்பட்டது. ஆனால் ஆங்காங்கே தார் ரோடு பெயர்ந்து பயன்பாட்டில் இருந்து விலகி வருகிறது. இரண்டு ஓரங்களிலும் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகளும் அப்புறப்படுத்தப் பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் உட்பட அதிக வாகன போக்குவரத்தால் மாணவர்களுக்கு விபத்து அச்சம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி