உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள பள்ளத்தால் ஆபத்து

பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள பள்ளத்தால் ஆபத்து

பரமக்குடி: பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் முன்பு ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தால் பஸ்கள் நிலை தடுமாறும் நிலையில் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் மதுரை- ராமேஸ்வரம் செல்லும் வழித் தடத்தில் பிரதானமாக உள்ளது. இங்கு தினமும் பல நுாறு பஸ்கள் வந்து செல்கின்றன. பரமக்குடியில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான டவுன் பஸ்கள் ஓட்டை உடைசலாகவே செல்லும் நிலை இருக்கிறது. இந்நிலையில் பஸ்கள் வெளியேறும் ரோடு பகுதி ஒட்டுமொத்தமாக இரண்டு அடி வரை பள்ளமாகி கிடக்கிறது. இதனால் முன் மற்றும் பின் டயர்கள் ஏறி இறங்கும் போது பஸ்களின் முகப்பு மற்றும் பின் பகுதி ரோட்டுடன் உரசி விபத்து ஏற்படுகிறது. மேலும் ஒவ்வொரு முறையும் சில பஸ்கள் படிகள் வரை உடைந்து பழுதாகிறது. இதையடுத்து பயணிகள் அச்சத்துடன் பரிதவிக்கும் நிலை உண்டாகிறது. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளங்கள் குறித்து அறிய முடியாமல் டூவீலர் மற்றும் பாதசாரிகள் தடுமாறுகின்றனர். ஆகவே மிகப்பெரிய ஆபத்து எதுவும் ஏற்படும் முன்பு அதிகாரிகள் ரோட்டை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பயணிகள், டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !