உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதமடைந்த சிமென்ட் சாலை கான்கிரீட் கம்பியால் ஆபத்து

சேதமடைந்த சிமென்ட் சாலை கான்கிரீட் கம்பியால் ஆபத்து

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் சேதமடைந்த சிமென்ட் சாலையில் கான்கிரீட் கம்பி வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நெரிசலை தவிர்க்க 2020ல் ரூ.50 லட்சத்தில் ராமேஸ்வரம் கச்சக்குளம் முதல் காட்டுபிள்ளையார் கோயில் தெரு வரை சிமென்ட் மற்றும் தார் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை தரமற்றதாக அமைத்ததால் கச்சக்களம் அருகே உள்ள சிமென்ட் சாலை சேதமடைந்து பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது.மேலும் இச்சாலையில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிந்தும் மற்றொரு இடத்தில் கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டும் உள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் கம்பியில் சிக்கி விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.தரமற்ற சாலை அமைத்து மக்களின் உயிரோடு விளையாடும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை புதுப்பிக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ