உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண்டபத்தில் ஆபத்தான மின்கம்பம்: மக்கள் பீதி

மண்டபத்தில் ஆபத்தான மின்கம்பம்: மக்கள் பீதி

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர். மண்டபம் ஓடைத்தோப்பு தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இத்தெருவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயர் அழுத்த மின்கம்பிகளுக்கு கம்பங்கள் ஊன்றினர். நாளடைவில் உப்பு காற்றில் மின் கம்பங்கள் அரிக்கப்பட்டு எலும்பு கூடாக மாறியது. இவற்றை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க அப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் மின்வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, கடிதம் மூலம் மின்வாரிய அதிகாரியிடம் வலியுறுத்தியும் மின்கம்பங்களை அகற்றாமல் உதாசீனப்படுத்தினர். வரும் மழை சீசனில் மின் கம்பங்கள் தாக்கு பிடிக்காமல் கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால் விபரீதம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் வசிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !