உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்

 பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்

டிச.30 சொர்க்கவாசல் திறப்புபரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம் துவங்கி நடக்கும் நிலையில் டிச., 30 அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. மதுரை அழகர் கோயிலை போன்று பரமக்குடியில் மூலவராக பரமசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வீற்றிருக்கிறார். வைகுண்டத்தில் பெருமாள் வடக்கு திசை நோக்கி நித்திய சேவை சாதிக்கிறார். இதன்படி பரமக்குடி வைகை ஆறு படித்துறையில் வடக்கு முகமாக பெருமாள் கோயில் கொண்டுள்ள நிலையில், ஆண்டு முழுவதும் பரமபத வாசல் வழியாகவே பக்தர்கள் சுவாமியை தரிசிக்கும் பாக்கியம் பெற்றுள்ளனர். கோயிலில் டிச.20ல் பகல் பத்து உற்ஸவம் துவங்கியது. தினமும் பெருமாள் தாயார் மண்டபத்தில் எழுந்தருளி அங்குள்ள பன்னிரு ஆழ்வார்கள் சன்னதியில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து டிச., 29 மாலை 4:00 மணிக்கு மோகினி அவதாரத்தில் உலா வருகிறார். பின்னர் மாலை 6:00 மணிக்கு பரமபத வாசல் நடை அடைக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலிக்க உள்ளார். மேலும் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி