மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 4ம் நாளாக 'ஸ்டிரைக்'
06-Oct-2024
ராமேஸ்வரம் மீனவர்கள் 4ம் நாளாக 'ஸ்டிரைக்'
06-Oct-2024
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு புயல் கால நிவாரணம் ரூ.27.22 கோடியை தமிழக அரசு வழங்காமல் இழுத்தடிப்பதால் தீபாவளிக்கு புத்தாடை, இனிப்புகள் வாங்க முடியாமல் திணறுகின்றனர்.அக்., முதல் டிச., வரை தமிழகத்தில் புயல் சீசனில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்குவார்கள். இதற்கு நிவாரணம் வழங்க புயலுக்கு முன்பே மீனவர்களிடம் சேமிப்புத் தொகையாக ரூ.1500 மீன்துறையினர் வசூலித்து வங்கியில் டெபாசிட் செய்து விடுவார்கள். இந்த தொகையுடன் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு ரூ. 3000 சேர்த்து ரூ.4500ஐ அக்.,ல் அதுவும் தீபாவளி பண்டிகைக்கு முன்பே மீனவர்கள் வங்கி கணக்கில் தமிழக அரசு வழங்கி விடும். இதன் மூலம் தீபாவளிக்கு மீனவர்கள் புத்தாடைகள், இனிப்புகள் வாங்கி மகிழ்வார்கள்.இந்த நிவாரணத் தொகை பெற்று ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தை சேர்ந்த 38,687 மீனவர்கள் பயனடைகின்றனர். மேலும் குறைந்த கால மீன்பிடிப்பு நிவாரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள 16,366 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 6000 தனியாக தமிழக அரசு வழங்குகிறது. ஆனால் தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் நேற்று மாலை வரை மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ.27.22 கோடியை வழங்காமல் அரசு இழுத்தடித்து வருகிறது.இதனால் புத்தாடை, இனிப்புகள், மளிகை பொருட்கள் வாங்க முடியாமல் திணறி வருவதால் நிவாரணம் வருமா என்ற ஏக்கத்துடன் மீனவர்கள் காத்திருக்கின்றனர்.இதுகுறித்து ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,இன்று (அக்.,29) அல்லது நாளை நிவாரணத் தொகை மீனவர்கள் வங்கி கணக்கில் சேர்ந்து விடும் என்றார்.
06-Oct-2024
06-Oct-2024