மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முது குளத்துார், திருவாடானை ஆகிய நான்கு சட்ட சபை தொகுதிக்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார்.இதில் 1374 பாகங்களில் ஆண்- வாக்காளர்கள் 5 லட்சத்து 80 ஆயிரத்து 871 பேர், பெண்- வாக்காளர்கள் 5 லட்சத்து 88 ஆயிரத்து 81 பேர், திருநங்கைகள் -68 பேர் என 11 லட்சத்து 69 ஆயிரத்து 20 வாக்காளர்கள் உள்ளனர்.இதற்கு முன் நவ. 27ல் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின் படி நான்கு சட்டசபை தொகுதிகளிலும் 5 லட்சத்து 73 ஆயிரத்து 462 ஆண்கள், 5 லட்சத்து 78 ஆயிரத்து 771 பெண்கள், 69 திருநங்கைகள் என 11 லட்சத்து 52 ஆயிரத்து 302 பேர் இருந்தனர்.அதன் பிறகு பெற்ற மனுக்களின் அடிப்படையில் 12,199 ஆண்கள், 14,702 பெண்கள், 3 திருநங்கைகள் என 26,904 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 4790 ஆண்கள், 5,392 பெண்கள், 4 திருநங்கைகள் என 10,186 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.இறுதி வாக்காளர் பட்டியல் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், உதவி ஓட்டுச்சாவடி அலுவலர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். www.elections.tn.gov.inமற்றும் www.nvsp.in ஆகிய இணையதளங்களில் பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.நிகழ்ச்சியில் பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., கோபு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், தேர்தல் தாசில்தார் முருகேசன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.