| ADDED : மார் 14, 2024 11:52 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தி.மு.க., அரசை கண்டித்து அரண்மனை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.வி.எச்.பி., மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில சேவா துணைத் தலைவர் பிரபாதேவி, பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தனர். பரமக்குடியில் அயோத்தி பெண் துறவி சிப்ராபதக் கார் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டிக்கிறோம். அவர்களை கைது செய்ய வேண்டும். தி.மு.க., ஆட்சியில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் விற்பனை, குறிப்பாக ராமநாதபுரத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இதை தடுக்க தவறிய தி.மு.க.,அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் குமார், பா.ஜ., ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குமரன், மாவட்ட பொறுப்பாளர் வீரபாகு, வி.எச்.பி., ராமேஸ்வரம் கோட்ட அமைப்பாளர் சிவசாமி, மாவட்ட துணை தலைவர்விஜயா உட்பட பலர் பங்கேற்றனர்.